2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலால் ஐ.தே.க வுக்கு அதிக பாதிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பின்தள்ளிப் போடப்படுகின்றமையால், ஐக்கிய தேசியக் கட்சி அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சந்திராணி பண்டார, சனிக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.  

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வீதி திறப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அவர் மேலும் உரையாற்றுகையில்,  

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதிக்கின்றது என்று ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இதுவே உண்மையான நிலையாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

பொதுத்தேர்தல் நிறைவடைந்தப் பின்னர், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெற்றிருக்குமாயின், அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .