2025 ஜூலை 19, சனிக்கிழமை

உழவு இயந்திரத்தில் சமூகமளித்த தவிசாளர்

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை கிழக்கு மாகாண பிரதம செயலகத்தினால் மீளப்பட்டுள்ளதால் தவிசாளர்கள் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு செல்வதற்கக வாகனங்கள் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (16) அன்று நடைபெற்றகூட்டத்திற்கு ஏறாவூர் பற்றுசெங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் ஆகியோர் தங்களது சபைகளில் கழிவுகள் ஏற்றும் உழவு இயந்திரங்களில் சமூகமளித்திருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் பிரதேச சபையின் தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் கிழக்கு மாகாண பிரதம செயலகத்தினால் மீள பெறப்பட்டுள்ளது.

இதை நாங்கள் பழிவாங்கும் நோக்கமாகவே கருதுகின்றோம். எமக்கு கூட்டத்திற்கு செல்வதற்கு வாகனம் இல்லாத காரணத்தினால் தங்களது சபைக்குச் சொந்தமான கழிவு ஏற்றும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

 சபேஷ்

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X