2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் கடத்தப்பட்டமைத் தொடர்பில் டீ.ஐ.ஜி தென்னகோனிடம் வாக்குமூலம்

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு  பிரிவினர் மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ​ தென்னகோனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

போத்தல கட்டத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தென்னகோன் நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார்.

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் எம்பில்தெனிய பிரதேசத்தில் வைத்து வௌ்ளைவான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, வீதியில் வீசிச் செல்லப்பட்டிருந்தார்.

இவர் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உள்ளானமைத் தொடர்பில் மிரிஹான பொலிஸார் இந்த விடயத்துடன் சம்பந்தம் இல்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர் ​  தென்னகோன் நுகேகொட பிரிவுக்கு பொறுப்பாக இருந்தமையால், இந்த கைது தொடர்பில்  இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி  போத்தல ஜயந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .