Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது விசாரணை விடயத்தில் அதிகம் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று 9) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் லசந்த கொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அவர் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களின் முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, வெற்றியும் பெற்று 4 வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது. ஆனால் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யாரெனத் தெரிந்தும் இன்னும் ஜனாதிபதி இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஊடகப்பேச்சாளர் மஹிந்த சமரசிங்க ஊடகவியலாளர் லசந்த கொலை செய்யப்பட்டமை, மற்றுமொரு ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு தீர்வு வழங்கும் விடயத்தில் அதிகமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளதை தான் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
எனினும் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தான் ஜனாதிபதியின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு காணப்படுகின்றது. எனவே ஜனாதிபதி உடனடியாக இந்த விடயத்தில் தலையிட வேண்டும். ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் முன்னர் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு இந்த விடயத்தில் தீர்வை வழங்க முன்வருவார் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
4 hours ago