2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு

Nirosh   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசாரணை ஒன்றுக்காக இம்மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தன்னை அழைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் தெரிவித்தார். 

எதற்காக தன்னை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்பதுத் தொடர்பான தௌிவான விளக்கமில்லாத, சிங்கள மொழியில் இருந்த கடிதமொன்றை தனக்குப் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, தனக்கு சிங்களம் தெரியாதெனவும் இதுபோன்ற கடிதங்களை தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் தனக்கு வழங்குமாறும் கடிதத்தை வழங்கிய பொலிஸாரிடம் தான் கூறியதாகவும் குமணன் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X