Editorial / 2020 மே 14 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் காணப்படும்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 18 ஆம் திகதி முதல், 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago