2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஊழல் எதிர்ப்புக்கு ஜப்பான் நிதியுதவி

S.Renuka   / 2025 ஜூலை 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் உதவியுடன் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் மூன்று ஆண்டு திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் அரசு இந்தத் தொகையை வழங்கியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு பொறிமுறையை நிறுவுவதன் மூலம் ஊழல் நடைமுறைகளைக் கையாள்வதற்கான ஒரு பொறிமுறையை நிறுவுவது தொடர்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
இதற்கான ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பான் தூதர் மற்றும் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி இடையே இன்று (01) காலை இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .