Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 360 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன், மூவர் தொற்றுக் காரணமாக மரணித்துள்ளனர்.
அத்துடன், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தால், கரையோர மார்க்கத்திலான 5 ரயில் நிலையங்கள் உட்பட சுமார் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இன்று (19) முதல் 82 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025