Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போகச்செய்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்களை, பிணையில் விடுவிக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று வியாழக்கிழமை (22), உத்தரவிட்டது.
சமிந்த குமார நவரத்ன, தரங்க பிரசாத், கனிஷ்க குணரத்ன மற்றும் பாலசுப்ரமணியம் அகிய நால்வரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரியை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்கிஸை மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேஇ நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
40 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
1 hours ago