2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமைக்கு மஹிந்த, கோட்டாவே பொறுப்பு’

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நி​ரோஸ்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு ​அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா ​தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று(24) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த சந்தியா, மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கு எதிராகவும் கருத்து  தெரிவித்திருந்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்ட அவர், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்மை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நீதி கிடைக்கவில்லை என்பதால் இந்த பிரச்சினையை கடவுளிடம் ஒப்புவிக்க தீர்மானித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .