2025 ஜூலை 05, சனிக்கிழமை

எதிர்காலம் குறித்து சு.க ஆலோசனை

Editorial   / 2018 டிசெம்பர் 15 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீரவின் இல்லத்திலேயே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவது குறித்தே இவர்கள் ஆலோசனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .