2025 ஜூலை 05, சனிக்கிழமை

எதிர்க்கட்சி அலுவலகம், இல்லம்; மஹிந்தவுக்கு இல்லை

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேர் மார்க்ஸ் பெர்ணான்டோ மாவத்தையில் ​அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பவற்றை, எவரிடமும் ஒப்படைக்கப் போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம், குறித்த அலுவலகமும் இல்லமும், எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளதாக, மஹிந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில், இன்னமும் எதிர்க்கட்சித் தலைமை, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடகே காணப்படுகின்றதெனும் நிலைப்பாட்டுக்கு அமை​ய, கூட்டமைப்பு, மேற்கண்ட தீர்மானத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .