2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளார் சம்பந்தன்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ் 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளார் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், தனிநபருடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது அரசமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது. 

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன, 2019ஆம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்​டி ஏற்படும் எனவும் எச்சரித்தார். 

மேலும், நாட்டுக்கு வெளியில் செல்லும் நிதியைக் குறைத்து, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நிதியை அதிகரிப்பதனூடாக, ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.  இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் கொடுக்கல் வாங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடியைத் தொடர்ந்தே, இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அமைச்சர் மலிக் சமரவிக்ரம மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .