2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு?

Editorial   / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளமைத் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவ​ர்தன தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற எதிர்பார்த்துள்ளதாகவும், இந்த பதவிக்கு மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .