Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக, நாளை தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு இஸிபத்தான கல்லூரி, மாத்தறை மாநாஹம வித்தியாலயம், குருநாகல் சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர வித்தியாலயம், கண்டி- சென் அந்தனிஸ் பெண்கள் பாடசாலை ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கல்விப் பொது தராதர சாதாரணத் தர பரட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேலும் 21 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் நிலையில், குறித்த பாடசாலைகளில் ஒரு பகுதியில் மாத்திரமே மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுவதால் இந்த பாடசாலைகள் மூடப்படாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
4 hours ago