Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 06 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்றை, எதிர்வரும் தீபாவளி தினத்துக்குள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய தீபாவளி விழா, ஜனாதிபதியின் தலைமையில், நேற்று (05), ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒவ்வொருமுறையும், இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில், தங்களது பங்களிப்பு, அளப்பரியதாக அமைந்தது என்று கூறிய அவர், இந்த அரசாங்கத்தை நம்பி, எம் தமிழ் மக்கள், தங்களது வாக்குகளை அளித்திருந்ததாகவும் அவர் கூறினார். இதே ஜனாதிபதி, தன்னுடைய பதவியேற்பின் பின்னர், இதே மாளிகையில், பல தடவைகளாகக் தீபாவளி விழாவைக் கொண்டாடியுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட அவர், அந்த விழாக்களுக்கு, தானும் ஒவ்வொரு முறையும் வந்துபோவதாகவும் கூறினார்.
ஒவ்வொரு முறையும், தம் மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்றைக் கோரி வந்துள்ளதாகவும் பிரிக்கப்படாத நாடொன்றுக்குள், சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதையே, எம் கோரிக்கையாக முன்வைக்க விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால், இன்று வரை, அது நடைபெறாமல்லை என்று, அவர் இதன்போது கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .