2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எனக்கு கொலை அச்சுறுத்தல்: முஜிபுர்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள மூவர், மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர், மேற்கண்டவாறு கோரிநின்றார்.

தனக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரால் தனக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்க வேண்டும்.

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருந்த போது உரைக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஸாந்த மற்றும் இந்திக அனுருத்த ஆகியோர், தாஜுதீன் தொடர்பில் பேசவேண்டாம் என்று மரண அச்சுறுத்தல் விடுத்தனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குழுவில் கலந்துரையாடப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X