2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எம்.பிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க யோசனை

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத் தொடருக்கான கொடுப்பனவு 500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக ஆக அதிகரிக்கும் யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், உறுப்பினர்களின் அலுவலகப் பராமரிப்புக்கு மாதாந்தம் 100,000 ரூபாய் வழங்கும் யோசனையை முன்வைக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அந்த ​​யோசனையை முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .