Janu / 2026 மார்ச் 17 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Fuel Quota) சனிக்கிழமை இரவுடன் காலாவதியாகும் என்றும், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
"தமது எரிபொருள் ஒதுக்கீடு முடிந்தவுடன், அடுத்த நாளே அது மீண்டும் கிடைத்துவிடும் என்று மக்கள் கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு சனிக்கிழமை நள்ளிரவிலேயே நிறைவடைகிறது," என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு (QR Code) முறைமையின் மூலம், நாட்டின் எரிபொருள் நுகர்வை சுமார் 20% வரை குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை இல்லாதொழிப்பதற்காகவே இந்த QR குறியீட்டு முறைமை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக விளக்கமளித்த ராஜகருண, எதிர்வரும் மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாகப் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
26 minute ago
27 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
41 minute ago
56 minute ago