2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி -  கோல்பேஸ்கோட் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்துபோன நிலையில் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில், நேற்று (19) இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அரங்கல – ஹோகந்தர வடக்கு – அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .