2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் வர்த்தகம்: 24 நிறுவனங்கள் விருப்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (28) தெரிவித்தார்.

நீண்ட கால ஒப்பந்தங்களில் கீழான இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களிடம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அமைச்சு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைய, 24 நிறுவனங்கள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

குறித்த முன்மொழிவுகளை அமைச்சு மதிப்பீடு செய்து ஆறு வாரங்களில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .