2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எரிபொருள் விலை குறைப்பு

Editorial   / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது..

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாயினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாயினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாயினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் மண்ணெண்ணெய் விலையில்‌ மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .