Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2025 ஜூலை 24 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரி பாகங்களின் விலை மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் டொக்டர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, செலவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பலன்கள் நுகர்வோருக்குக் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025