Freelancer / 2025 நவம்பர் 30 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.
எனினும் சில இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும், சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உங்கள் பிரதேசத்தின் தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அறிவித்துள்ளது. R
13 minute ago
19 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
28 minute ago
38 minute ago