2026 மே 02, சனிக்கிழமை

’எறும்பு கடித்ததைப் போலவே கொவிட்-19 சோதனை இருந்தது’

Editorial   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி- கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார்மடம் சந்தையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், வலி. கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்  தியாகராஜா நிரோஷ், வினயமாகக் கேட்டுக்கொண்டார்.

'எமது, வலிகாமம் கிழக்கில் இருந்து பெருந்தொகையான விவசாய உற்பத்திப் பொருள்கள் மருதனார் மடம் சந்தைக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆகையால், அந்தச் சந்தையுடன் எமது மக்கள் நேரடித் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். ஆகையால், வலிகாமம் கிழக்குப் பகுதி மக்கள்இ உச்சப்பட்ச சமூகப்பொறுப்பை வெளிக்காட்டிச் செயற்பட்டால் மட்டுமே, தம்மையும் ஏனையோரையும் பாதுகாக்க முடியும்' என்றார். . 

மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட 25 குடும்பங்கள், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கோப்பாய் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரியுடன் பேசியுள்ளேன் எனத் தெரிவித்த தியாகராஜா நிரோஷ், சுகாதாரத்துறையின் தீர்மானங்களின் பிரகாரம், எமது பிரதேச சபை தொழிற்படும் என்றார். 

சந்தையுடன் தொடர்புபட்டவர்களைக் கண்டறிவது கடினமான பணியாகும். வியாபாரிகளை இலகுவில் கண்டறிய முடியுமாயினும் சந்தைக்கு விற்பனைப் பொருட்களை விற்கவும் வாங்கவும் சென்று வந்தவர்களை அடையாளப்படுத்துவது சவாலான பணியாகும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு தொடர்புபட்டவர்கள் முதலில் கிராம சேவகரிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு அயலில், எவராவது தம்மை வெளிக்காட்டாது இருப்பார்கள் ஆயின்இ அதுபற்றி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு நேரடியாக அறிவிக்கமுடியும்' என்றார். 

கொவிட்-19 (பி.சி.ஆர்) பரிசோதனைக்கு நானும் உட்பட்டேன். அது ஒன்றும் கஸ்டமானது அல்ல; வலி கிடையாது; சாதாரணமாக எறும்பு கடித்ததைப் போலவே இருந்தது. எனவே யாரும் அச்சம்இ அலட்சியம் காரணமாக, இருந்துவிடக்கூடாது. எனவே, நாம் சமூகப் பொறுப்புணர்வை நிலைநிறுத்திச் செயற்படுவோம் என கேட்டுக்கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .