2025 மே 21, புதன்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த  9 பேரை, எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன, நேற்று புதன்கிழமை(16) உத்தரவிட்டார்.

குறித்த நபர்கள் சம்பந்தப்பட்ட ஆறு வழக்குகள் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எவ்வித அறிவுறுத்தல்களையும் பெறாததால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கபில கேட்டுக் கொண்டதற்கிணங்க, மேலதிக நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக, எதிர்வரும் ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், நீதவானிடம் கூறினர்.

இதற்கு முந்தைய இரு தடவைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த  39 பேர் கடும் நிபந்தனைப் பிணைகளில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .