2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எல்லை நிர்ணயத்துக்கு ஒருமாதகாலம் நீடிப்பு

Kanagaraj   / 2016 மே 02 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

தேர்தல் தொகுதிகளை தீர்மானிப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள காலம், இன்னுமொரு மாதகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எல்லைகளை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே, இவ்வாறு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'கிருலப்பனையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்திய மே தினக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலே தொனிப்பொருளாக இருந்தது. இவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. தேர்தலுக்கான பணிகள் என்று நிறைவு பெற்றதன் பின்னரே தேர்தல் நடைபெறும்' என்று அவர் குறிப்பிட்டார்.

'எல்லை நிர்ணய செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. இதனை நிறைவு செய்வதற்கான காலம் பற்றாக்குறையாக உள்ளமையாலேயே, தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம்; ஏற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிக்கமைய, உள்ளூராட்சி மன்றத்தேர்தல், தொகுதி வாரி முறையிலேயே நடைபெறும். இதற்கான ஆதரவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இ 'கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில், சிறுபான்மை சமூகத்துக்கு பெரும் பாதிப்பு காணப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும். இதில் மாற்றம் இல்லை' என்று அவர் உறுதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X