Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.
உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் தொடங்கி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை சென்றடையும்.
காலை 8:30 க்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 8:45 க்கு, அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .