2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் கலந்துரையாடல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று முன்தினம்  (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு,  2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பது என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தி தொடர்பான பல அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையை முன்னேற்றுதல், சுங்க நடவடிக்கைகளின் செயற்திறனை மேம்படுத்த புதிய ஸ்கேன் இயந்திரத்தை நிறுவுதல், மருந்து ஏற்றுமதித் தொழில் துறை, கோழி இறைச்சி ஏற்றுமதி,தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி,மசாலா ஏற்றுமதி, Export Hub எண்ணக்கரு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, ஏற்றுமதி சார் முதலீட்டு மேம்பாடு, இலத்திரனியல் ஏற்றுமதித் துறைக்கு மூலப்பொருட்களை வழங்குதல், புதிய தீர்வை வரி ஒப்பந்தங்களுக்கு செல்லுதல் மற்றும் தீர்வை வரிகள் உள்ளிட்டவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .