Editorial / 2025 ஜூன் 16 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று(16) காலை நடைபெற்றது.
17 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் உப- தவிசாளர் தெரிவுக்கான இன்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் ஒருங்கிணைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் முன்மொழிந்து வழிமொழியபட்டார்.
அதனைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பர்லின் பெயரும் முன்மொழிந்து வழிமொழியபட்டது.
இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ். நழீழுக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம். எஸ். சமீமுக்கு (பர்லின்) ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் 07 உறுப்பினர் வாக்களித்தனர்
இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ்.எம்.நழீம் 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.
ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமாது. எம்.எஸ்.எம். நழீம் தவிசாளராக அரியாசனம் ஏறினார்.
42 minute ago
46 minute ago
55 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
55 minute ago
13 Mar 2026