2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

’ஐ.எம்.எப் கடன் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்’

Freelancer   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் முதல் படி, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் இலக்குகளை அடைவதில் எந்த சிக்கலும் இலலையெனவும், இதனால் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X