2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பின் ஆபத்தான் பகுதிகள் கண்டுபிடிப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இராஜகிரிய - ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி - கொலன்னாவ, பொரளை - வனாத்த முல்ல, மொரட்டுவை - லுனாவ, முகத்துவராம் - மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பொலிஸ் துறை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X