2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று மட்டக்களப்பு வவுணதீவுக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரே, அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர்.

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கே, அக்குழுவினர் அங்கு விஜயம் செய்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .