Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 06 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகரின் அறிக்கைக்கமைய, தாம் இன்னும் அமைச்சர்களாகவே இருப்பதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று பொலிஸ் தலைமையகத்துக்கு செல்லத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, நளின் பண்டார, பாலித தெவரப்பெரும உள்ளிட்டோரே பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது பாதுகாப்புகளுக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், பொலிஸ்மா அதிபரிடம் வினவுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, தம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தமையால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை பொலிஸ்மா அதிபரே ஏற்க வேண்டுமெனவும் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
16 minute ago