2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.தே.க ​பிரதி பொது செயலாளராக ருவான் விஜேவர்தன

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொது செயலாளராக நியமிப்பதற்கு, கட்சியின் செயற்குழு, ஒருமனதாககத் தீர்மானித்துள்ளது.

அத்தோடு, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவை, கட்சியின் உள்விவகாரச் செயலாளராக நியமிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழுக்கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றபோதே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடலும் அதற்கான சிறப்புத்திட்டங்களும் இதன்போது ஒப்படைக்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .