2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ.தே.க மற்றும் மொட்டு ஆதரவாளர்கள் மோதல்; ஐவர் காயம்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைத்தமை  சட்டவிரோதமானதென உயர்நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, நேற்று (13), நேருநுவர பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்  மொட்டு ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்,  ஐவர் காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.தே.க ஆதரவாளர்கள் வெற்றிக் களிப்பை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை கொளுத்தியபோது, இதனை அவதானித்த மொட்டு ஆதரவாளர் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்த போது மோதல் இடம்பெற்றுள்ளது.

 மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  சேருநுவர பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினரான சுகத் ராமநாயக்கவும்  அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இருதரப்பு முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .