2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளராக ருவன் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக, கட்சியின் செயற்குழு நியமித்துள்ளது.

அத்துடன், அமைச்சர் சாகல ரத்நாயக்க, கட்சியின் உள்ளக நடவடிக்கைக்குப் பொறுப்பான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில், நேற்று (24) இரவு இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போதே, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு, அமைச்சர் கபீர் ஹஸீமுக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வேலைத்திட்டத்தை, கட்சியின் அதிகாரிகள் சபையில் முன்வைத்து, பின்னர் செயற்குழுவிடம் சமர்ப்பித்து அனுமதி பெறப்பட வேண்டுமெனவும், யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், கம்பெரலிய வேலைத்திட்டத்தை, வெற்றிகரமான முன்னெடுக்கும் முறைமை தொடர்பிலும், இதன்போது தீர்க்கமாக ஆ​ராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .