2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.நா பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு வாழ்த்து; காணாமல் போனோர் குறித்தும் பேச்சு

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட தொடர்பாடல் அதிகாரியான ஹெனா சிங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிகாரிகள் (17) ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்தாலோசித்த போதே பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது,  வறுமை ஒழிப்பு, வானிலை மாற்றங்கள், அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல்,  காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான செயற்பாடுகளை கையாளும் விதம் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகள், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கள் செயற்பாடுகளுக்கு இலங்கையைக்கு முழுமையான உதவிகளை வழங்க தயாரெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், அதனை அரசியல் நோக்கத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் புறக்கணிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .