2025 மே 17, சனிக்கிழமை

ஐ.ம.சு.கூ குழுவொன்று சபாநாயகரை சந்திக்க முடிவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட, முன்னாள் மேல் மாகாண முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட மேலும் சிலர், சபாநாயகர் கரு ஜயசூரிவை சந்திக்கவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலேயே அவர்கள் சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.ம.சு.கூ குழுவொன்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கமவை அப்பதவிக்கு நியமிக்குமாறு கேட்டிருந்தது.

தானும், தனது அணியும் தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு எதிர்க் குழுவாக செயற்படவுள்ளதாக, கம்பஹாவில் இடம்பெற்றுள்ள கூட்டமொன்றில் கலந்து கொள்ளும்போது பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தாங்கள் சம்பந்தனை எதிர்க்கவில்லையெனினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படும் வட மாகாண சபையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி பாரிய அமைச்சரவையை உருவாக்கி தவறிழைத்ததாகவும், அதே நிலையே தற்போதும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சிறி லங்கா சுதந்திரக் கட்சியினை தலைமையாக கொண்ட ஐ.ம.சு.கூ சேர்ந்தவர் பிரதமராகும் வரை தான் போராடாப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .