2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில், தலைமைப் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்னி தலைமையில் பொலிஸார் வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, 15 கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சோந்த 23 வயதுடைய இளைஞராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X