2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஐஸ்லாந்தில் இலங்கைப் பெண்கள் மீட்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்தில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்களை அடிமைகளாக நடத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரில் வைத்ததே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் வீட்டின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றிலேயே இரண்டு இலங்கை பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் பெண்களையும் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X