Simrith / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் 150,000 ரூபா ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago