2025 மே 01, வியாழக்கிழமை

ஒட்சிசன் கொண்டுவர புறப்படுகிறது 'சக்தி'

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசனை கொண்டுவருவதற்கு இலங்கை கடற்படை கப்பலான "சக்தி" சென்னை துறைமுகத்துக்கு புறப்பட இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் ஒட்சிசன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 100 மெற்றிக் தொன் மருத்துவ தர ஒட்சிசனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

ஒட்சிசனைக் கொண்டுவருவதற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், கப்பல் இன்று புறப்படும் என்று தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா, சென்னை துறைமுகத்தை அடைய 36 மணி நேரம் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

எஸ்எல்என்எஸ் சக்தி என்பது இலங்கை கடற்படையின் மிகப்பெரிய டேங்கர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .