2024 மே 04, சனிக்கிழமை

ஒமிக்ரோன் விவகாரம்; 'சுகாதார அமைச்சு அறிவிக்கவில்லை'

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் சுகாதார அமைச்சு தங்களுக்கு அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர்  தனிமைப்படுத்தல் அல்லது பீசிஆர் பரிசோதனைகளுக்கு  உட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

தற்போதைய விதிமுறைகளின்படி, வீட்டு தனிமைப்படுத்தலின் ஏழாவது நாளில் பீசிஆர் மேற்கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும், நாங்கள் குறித்த பெண்ணுக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ பீசிஆர்பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் கூறினார்.

இதேவேளை, நவம்பர் 24 அன்று சம்பந்தப்பட்ட பெண் நாட்டுக்கு வந்தபோது, ஒமிக்ரோன் மாறுபாடுடைய நோயாளிகள் எவரையும் ​​​​உலகம் கூட கண்டறியவில்லை என்று சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். 

இருப்பினும், இது ஒரு சந்தேகத்துக்கிடமான தொற்றாக இருக்குமோ என்று தான் சந்தேகித்ததாகவும் அதனால்தான் அப்பெண் லுனாவாவில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நாங்கள் வழக்கமான நெறிமுறைகளைப் பின்பற்றுவதால், சம்பந்தப்பட்ட பெண் சிகிச்சை மையத்தில் ஒன்பது நாட்கள் முடிந்த பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்  என்று டொக்டர் ஹம்தானி கூறினார்.

இருப்பினும், மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கூறியதன் தொடர்பில் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளால் இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகளுக்கு  தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், சுகாதார அமைச்சகம் தங்கள் கடமையைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .