Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் அதிகாலையில் ஏழு வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 50 பவுன் நகை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயத முனையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கோப்பாயில் இந்து மதகுரு ஒருவரது வீட்டின் கதவை உடைத்து உட்புகுந் திருடர்கள், மதகுருவை தாக்கி அங்கிருந்த நகைகளை கொள்ளையிட்டதுடன் ஆலய திருப்பணிக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர்.
தொடர்ந்து மேலும் ஆறு வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்திருட்டுக்கள் ஒரே கும்பலால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவித்த கோப்பாய் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago