2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஒருவர் படுகொலை: மூவருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

டயகம மேற்கைச்சேர்ந்த 39 வயதான சந்தனம் மைக்கல் என்பவரை 2003 ஓகஸ்ட் 6 ஆம் திகதியன்று படுகொலைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அதேதோட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதியான லலித் ஏக்கநாயக்கவே, சற்றுமுன்னர் தீர்ப்பளித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான பெருமாள் மகாலிங்கம் (அப்பா), 37 வயதான மகாலிங்கம் சிவனேஷ்வரன் (மகன்) மற்றும் உறவு முறையான பாலகிருஷ்ணன் சுவனேஷ்வரன் (வயது 32) ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அத்தோட்டம் அக்கரைபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டு இருந்தது. தற்போது, டயகம பொலிஸ் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X