2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீடிக்கப்படும் சாத்தியம்?

Editorial   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக   பிறப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்​போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதல். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டும், சுகாதார வழிமுறைகளை பலரும் முறையாக பின்பற்றாமையை கவனத்தில் கொண்டுமே இவ்வாறு ஊரடங்கை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதா அல்லது முழுமையான முடக்கத்துக்குச் செல்வதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எவையும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X