2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பம்

J.A. George   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி - தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் இந்த ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் , தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .