2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒரே உடுப்பை துவைத்து, துவைத்து 5 நாட்கள் அணிந்தேன்: விமல்

Editorial   / 2022 நவம்பர் 08 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆசிரியர், ஆசிரியைகளின் சீருடைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம். ஏனைய அரச ஊழியர்களுக்கும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன எனத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி, ஆசிரியர், ஆசிரியைகளையே மாணவர்கள் பின்பற்றுகின்றனர் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

சில அரச சார்ப்பற்ற நிறுவனங்கின் பின்னால் ஓடிக்கொண்டிருப்போரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவேண்டாம். பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் எனக் கோரினால், முழு நாடே குழம்பிவிடும் என்பதால்தான், ஆசிரியைகளின் சாரிகளை மாற்ற வேண்டும் என்பது தொடர்பில் கருத்துரைத்துள்ளனர்.

ஒரு சாரியை உடுத்திக்கொண்டு செல்லமுடியாது. பொருளாதார பிரச்சினை இவையெல்லாம், அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கையாகும். ஹைட்டியில் பாடசாலை மாணவர்களுக்கு என தனியான சீருடை இல்லை. வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தங்களுடைய பிள்ளைகள் எங்குச் செல்கின்றனர் என்பது தொடர்பில் அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியாது என்றார்.

சிறிய காலத்தில் நான் பாடசாலைக்குச் செல்லும் போது என்னிடம் ஒரேயொரு காற்சட்டையும், சேர்ட்டும் மட்டுமே இருந்தன எனத் தெரிவித்த விமல் வீரவன்ச, அதனை ஒவ்வொரு நாளும் துவைத்து, துவைத்து போட்டுக்கொண்டுதான் ஒருவாரமாக பாடசாலைக்குச் செல்வேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .