2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஒரே நாளில் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று

J.A. George   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவது 10.99 சதவீதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,16,30,885-ல் இருந்து 4,18,03,318-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,59,107 பேர் வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,95,11,307-ல் இருந்து 3,97,70,414-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இதன் எண்ணிக்கை 1733 ஆக இருந்த நிலையில் குறைந்துள்ளது. 
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,97,975-ல் இருந்து 4,98,983-ஆக உயர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X